Tuesday, December 30, 2025

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு : மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்புக்கு அடுத்து அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கூமாபட்டி கிராமம் உள்ளது. இந்த கூமாபட்டி சமீபத்தில் திடீரென்று இணையதளங்களில் டிரெண்டானது.

இந்த கிராமத்தை பிரபலமாக்கியவர் தங்கபாண்டி. dark_ night_ tn84 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் அவர் தனது கிராமம் குறித்த வீடியோவை பதிவிட்டு ‛ஏங்க கூமாபட்டிக்கு வாங்க..’ என சொல்லி சொல்லி ஊரை பிரபலமாக்கினார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை முடித்து கொண்ட தங்கபாண்டி, பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பிரேக் போடப்பட்டது. அவர் பஸ்சின் முன்புறம் போய் கதவில் மோதினார்.

அவரது தோள்பட்டையில் கதவு பலமாக இடித்தது. இதில் தங்கபாண்டியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related News

Latest News