கோலிவுட்டை கலர் அடித்த கௌதம் மேனனின் காதல் கலீடாஸ்கோப்!

274
Advertisement

‘இது லவ் தானே ஜெஸி’ என்ற  வசனத்தை எங்கும் எதிரொலிக்க வைத்து, சேராத காதலின் வலியையும் தாண்டி அதன் அழகையும் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் காட்டி இருப்பார் கௌதம் மேனன்.

‘காக்க காக்க’ படத்தில் வழிந்தோடும் காதல், சூர்யா ஜோதிகாவை நிஜ காதலர்களாகவே மாற்றி விட்டது.

‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் காட்டப்பட்ட இரண்டாம் காதல், ‘நீதானே பொன் வசந்தம்’ படத்தின் பள்ளிப் பருவ காதல் என காட்டிய கௌதம், ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களில், காதல் எப்படியெல்லாம் ஒருவரை மாற்றும் என்பதை பதிவு செய்திருப்பார்.

கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்து கல்லூரியில் மெக்கானிக்கல் engineering படித்தவர் தான் கோலிவுட்டில் இத்தனை காதல் படங்களையும் செதுக்கியுள்ளார்.

கதாநாயகியை கவிதையாக திரையில் காட்டுவது, கதாநாயகனுக்கு ஹீரோயிசத்துடன் சேர்த்து ஆழமான வலியை கொடுப்பது, கதாபாத்திரங்களை classஆக சித்தரிப்பது என தனக்கென ஒரு trademark திரைக்கதை formulaவை வைத்து இருந்தாலும், ஒவ்வொரு படத்தையும் தனித்துவமாக்குவது தான் கௌதமின் சிறப்பு.

ரீனா, மாயா, மேக்னா, ஜெஸி, கார்த்திக், வீரராகவன், விக்டர், நித்யா போன்ற காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராக, தயாரிப்பாளராக மற்றும் பாடகராக தன்னை நிலைநிறுத்தி கொண்ட கௌதம் மேனன் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

‘ஜாஷ்வா இமை போல் காக்க’ ‘துருவநட்சத்திரம்’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டாம் பாகப் பணிகளில் ஈடுபட்டு வரும் கௌதமிற்கு பிரீத்தி என்ற மனைவியும், ஆர்யா, துருவ் மற்றும் அதியா என்ற மகன்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.