பெங்களூரு-சென்னை இடையிலான போட்டியில், ‘ஆல் ஏரியாலயும் அய்யா கில்லிடா’ ரேஞ்சில் தான் RCB ஆடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த Matchல் சென்னை சீட்டுக்கட்டு போல சரிய, 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தோனி நடந்து கொண்ட விதம், சொந்த ரசிகர்களையே வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 99 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து அணி தத்தளிக்கும் போதும், களத்திற்கு வராமல் வேறு வீரர்களை அனுப்பி வைத்தார்.
இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அத்துடன் அவர் எடுத்த DRSம் ‘இதுக்கு பருத்திமூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம்’ ரேஞ்சிலேயே அமைந்தது. அதேநேரம் இந்த போட்டியில் கோலி அடுத்தடுத்து சம்பவம் செய்துள்ளார்.
புவனேஷ்வர் குமார் ஓவரின் போது LBW தருவதற்கு, Umpire மறுத்து விட்டார். கோலி DRS எடுக்கும்படி ரஜத்தைத் தூண்டினார். முடிவில் கோலியின் கணிப்பு சரியாக, சென்னை முக்கிய விக்கெட்டை பறிகொடுத்தது.
இதேபோல பேட்டிங்கில் பதிரனா வீசிய பந்து கோலி ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியது. அது அவரின் ஈகோவை ஏகத்துக்கும் தூண்டி விட, அடுத்தடுத்து அவரின் ஓவரில் சிக்ஸரும், போரும் அடித்து, தன்னுடைய பழியைத் தீர்த்துக் கொண்டார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”17 வருஷமாச்சு ஆனா இன்னும் King அப்படியே தான் இருக்காரு” என, அவரைப் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையில் சேப்பாக்கத்தில் வைத்து CSKவை பெங்களூரு வீழ்த்தி இருந்தது.
17 ஆண்டுகளுக்கு பிறகு ரஜத் படிதார் அதை Recreate செய்து, RCB ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்து விட்டார். இதனால் தற்போது புள்ளிப்பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தில் ‘கெத்து’ காட்டி வருகிறது.