Tuesday, March 18, 2025

‘உங்களுக்கு’ என்ன பிரச்சினை? BCCI மீட்டிங்கில் கம்பீரை ‘எதிர்த்த’ கோலி..

கிரிக்கெட் வட்டாரத்தில் கவுதம் கம்பீர் – விராட் கோலி இடையிலான மோதல் அனைவரும் அறிந்தது தான். IPL போட்டியின்போது கம்பீர் – கோலி இருவரும் களத்திலேயே மோதிக் கொண்டனர். அப்போது கம்பீர், ”கோப்பை வெல்ல முடியாத ஜோக்கர்கள்” என்பது போல, கோலியை கிண்டலடித்து இருந்தார்.

தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் இருக்கிறார். இதனால் கோலி- கம்பீர் இருவரும் தங்களது பகையை மறந்து, சகஜமாக பேசிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தநிலையில் மீண்டும் இருவருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதிலும் BCCI மீட்டிங்கில் தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறதாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில், இந்தியா தோல்வியை சந்தித்தது குறித்து கம்பீர் BCCIக்கு அறிக்கை அளித்துள்ளார். அதில், ”சீனியர் வீரர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகின்றனர்.

பயிற்சிக்கு சரியாக வருவதில்லை,’ என்று சரமாரியாக கொளுத்திப் போட்டுள்ளார். இதையடுத்து BCCI, ”குடும்பத்துடன் வீரர்கள் தங்கக்கூடாது. பயிற்சிக்கு சரியாக வர வேண்டும்.  நினைத்த நேரத்தில் வரக்கூடாது,” என்று பல்வேறு ஸ்ட்ரிக்ட் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அண்மையில் மீட்டிங் நடைபெற்றுள்ளது. இதில் மூத்த வீரர்கள் ரோஹித், கோலி, ஷமி மற்றும் பும்ரா கலந்து கொண்டுள்ளனர். அப்போது இந்த விதிகளை கோலி கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து அவர், ” குடும்பத்துடன் நாங்கள் தங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அது எங்களது மன அழுத்தத்தினை குறைக்கிறது,” என்று கம்பீரை நேரடியாக தாக்கியிருக்கிறார்.

பதிலுக்கு கம்பீரும் இந்திய தோல்விகளை பட்டியலிட்டு பேச, இருவருக்கும் இடையில் கடும் வார்த்தை போர் நடைபெற்றுள்ளது. என்றாலும் BCCI இந்த விதிகளை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் கம்பீர் – கோலி இடையிலான மோதல் மீண்டும் வெடித்துள்ளது.

‘எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக’ இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்த கோலி,” ஒரு மோசமான ஆட்டத்திற்கு பிறகு தலையில் கைவைத்து சோகமாக அமர்ந்திருக்க, எந்த வீரரும் விரும்ப மாட்டார். வெளிநாட்டு பயணங்களின் போது ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து மீள்வதற்கு, குடும்பத்தினரின் ஆதரவு தேவை.

இந்த விதிகளை உருவாக்கியவர்களால் நிச்சயம் இதை புரிந்து கொள்ள முடியாது. குடும்பம் குறித்து தெரியாத நபர்களால் இதுபோன்ற விதிகள் உருவாக்கப்படுவது ஏமாற்றம் அளிக்கிறது. வீரர்கள் நல்ல மனநிலையில் இருந்தால் தான் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும்,” என்று பேசியிருக்கிறார்.

விராட் கோலியின் இந்த பேச்சு BCCI வட்டாரத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போட்டிகளின் போதும், போட்டிக்கு பிறகும் மனைவி அனுஷ்காவைத் தான் கோலியின் கண்கள் முதலில் தேடும். இவர்கள் இருவரின் க்யூட் ரியாக்ஷன்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news