மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்வேதா மேனன். மலையாளத்தில் அறிமுகமான முதல் படத்திலேயே மம்முட்டியுடன் நடித்து, அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகிலும் பிரபலமானவர். தமிழில், ’சிநேகிதியே’, ‘நான் அவனில்லை 2’, ‘இணையதளம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஆபாசக் காட்சிகளில் நடித்ததாக மலையாள நடிகை ஸ்வேதா மேனன் மீது கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளைஞர்களை திசைதிருப்பும் வகையிலும், பணத்திற்காகவும் நடிகை ஸ்வேதா மேனன் ஆபாசக் காட்சிகளில் நடிப்பதாகக் கூறி மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு தொடர கொச்சி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதற்கு மலையாள நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.