உயிருக்கு ஆபத்தான செடி! வீட்டில் வளர்க்காதீர்கள்…

567
Advertisement

பூச்சிகள், தவளைகள், ஏன் பறவைகளைக்கூடப் பிடித்துத் தின்னும் செடிகளும் இருக்கின்றன. இவற்றில் நம் விரல் மாட்டினாலும் காலி தான். அதேபோல, சில செடிகளின் முட்கள், இலைகளில் உள்ள பசைகள் ஆகியவை மனிதர் களையே கொல்லும் விஷத்தன்மை கொண்டவை.

அதுஎன்ன செடி என்றுதானே கேட்கிறீர்கள்?  Gympy Gympy என்பதுதான்  அந்தச் செடியின் பெயர் .

லண்டனைச் சேர்ந்த டேனியல் எமிலின் (44) என்பவர் உலகிலேயே மிக ஆபத்தான செடியாக விஞ்ஞானிகள் கருதும்ஜிம்பி ஜிம்பி‘ (Gympy Gympy) என்னும் இந்த செடியை வளர்த்து வருகிறார்மிக மோசமான பாதிப்புகளை தரக் கூடிய செடி இது. இந்தச் செடியின் மீதும், அதன் இலைகள் மீதும் மிக மிகச் சிறிய முட்கள் இருக்கும். இந்த இலை களையோ, செடியையோ யாராவது தொட்டால் அவ்வளவு தான். இந்த முட்கள் அவர்களை பதம் பார்த்துவிடும்.

முள் என்றால் சாதாரணமாக இருக்கும் முள் என நினைத்து விட வேண்டாம். நல்ல பாம்பு கடித்தால் எந்தளவுக்கு இருக்குமோ, அந்தளவுக்கு வலியைத் தரக் கூடியது. இந்த முள் குத்தியதால் ஏற்படும் தடிப்புகளும், வலியும் பல மாதங்களுக்கு அப்படியே இருக்கும். நாளுக்கு நாள் இந்த வலி அதிகரித்துக்கொண்டே இருக்குமே தவிர, குறையாது. மேலும், இந்த முட்களில் உள்ள விஷமானது நரம்பு மண்ட லத்தை பாதிக்கக்கூடியவை. இதனால் இந்த முள் ஆழமாகக் குத்திவிட்டால் மனிதர்களுக்கு தற்கொலை எண்ணம் வந்து விடும். பலர் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். 10 வயது க்குக் கீழுள்ள சிறுவர்களை இந்தச் செடியின் முட்கள் குத்தினால் மரணத்தைக்கூட ஏற்படுத்திவிடும்.

உலகிலேயே மிக ஆபத்தான இந்தச்செடிகளின் அருகே சிறுவர்கள், முதியவர்கள் செல்லாமல், பார்த்துக் கொள்வது கடமையாகும். மற்றவர்களும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.