Friday, June 27, 2025

‘உங்களுக்கு’ Use பண்ண தெரியல Princeஐ ‘அட்டாக்’ செய்த KKR கேப்டன்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா தோற்றதால், கேப்டன் சுப்மன் கில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவருக்கும், நாலாபுறமிருந்தும் அட்வைஸ்கள் குவிந்து வருகின்றன. முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ”பும்ரா 2வது டெஸ்டில் விளையாட வேண்டும்” என சமீபத்தில் அட்வைஸ் வழங்கி இருந்தார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ”2வது டெஸ்ட் போட்டியில் குல்தீப்பிற்கு வாய்ப்பு கொடுங்கள், ” என பேசியிருக்கிறார். முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ” தாகூரை அணியில் இருந்து நீக்குங்கள்,” என்று அறிவுரை வழங்கி உள்ளார். நிலைமை இப்படியிருக்க கொல்கத்தா கேப்டன் அஜிங்கியா ரஹானே, கில்லுக்கு ஷர்துல் தாகூரை பயன்படுத்த தெரியவில்லை என்று, கேப்டனை அட்டாக் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர்,” டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களின் வேலை முக்கியம் என்று நான் கருதுகிறேன். தாகூரால் பந்தை இரண்டு பக்கமும் Swing செய்ய முடியும். என்னை கேட்டால் அவருக்கு அதிக ஓவர்கள் கொடுக்க வேண்டும். குறிப்பாக பும்ராவுடன் சேர்ந்து தாகூர் பந்துவீச்சை துவக்க வேண்டும். ஷர்துலுக்கு தேவையான சுதந்திரத்தை அளித்தால் அவரால் நிறைய விக்கெட்களை எடுக்க முடியும்,” இவ்வாறு பேசியிருக்கிறார்.

முதல் டெஸ்டில் தோல்வி அடைந்ததால் கில், கம்பீருக்கு எதிராக எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்துள்ளன. நிலைமை இப்படியிருக்க சரியான சமயத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, இந்த சர்ச்சையை ரஹானே மேலும் பெரிதாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news