உத்தரபிரதேசத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து கால்களை உடைத்தனர்
உத்தரபிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாரி கேட் பகுதியில், நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் வந்த 25 வயது இளைஞர் ஒருவர், சாலையின் சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து எழுந்த புகாரின் பெயரில் போலீசார் இளைஞரை கைது செய்து கால்களுக்கு மாவுக்கட்டு போட்டு சிறைச்சாலைக்கு அனுப்பினர்.