வசூலில் அதிரடி காட்டிய ‘கிங்டம்’ : முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான படம் ‘கிங்டம்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், ‘கிங்டம்’ படம் முதல் நாளில் ரூ. 39 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related News

Latest News