பீஸ்ட்டை மிஞ்சிய ’கே.ஜி.எப் 2’

347
Advertisement

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கே.ஜி.எப் 2’ திரைப்படம் இன்று உலகெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக வெளியாகியது.

கேஜிஎப் முதல் பாகம் பெரும் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ’கே.ஜி.எப் 2’ பிரமாண்டமாய் வெளியாகியது.இதைஅடுத்தது யாஷ் ரசிகர்கள் 25 ஆயிரத்து 650 சதுர அடியில் யாஷின் மாஸ் போஸ்டரை உருவாக்கியுள்ளனர். முதலில் 120×170 அடியில் உருவாக்கத் திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அதனை விரிவுபடுத்தி 135×190 அடியில் யாஷ் போஸ்டரை உருவாகியுள்ளதாகவும் இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ’எனது ரசிகர்கள் குடும்பம் மிகவும் வலிமையானது என்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றும் யாஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.