KGF திரைப்படத்தில் ஷெட்டி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தினேஷ் (55) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
கன்னட திரை உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தினேஷ் மங்களூரு, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குந்தாப்பூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த தினேஷ் மங்களூர், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
கடந்த வாரம் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால், குந்தாப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கேஜிஎஃப் பட நடிகரின் மறைவு கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.