பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மீது கேரள போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனிடம் மேலாளராக பணி புரிந்து வந்த விபின் என்பவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சக பிரபல நடிகரான டொவினோ தாமஸின் நரிவேட்டை திரைப்படத்தை பாராட்டி FACEBOOK-ல் விபின் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரத்தில் தன்னை உன்னி முகுந்தன் தாக்கியதாக விபின் புகாரளித்த நிலையில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.