கேரளாவில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஏகே ரைரு கோபால் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
கேரளாவின் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ரைரு கோபால். இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.2க்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது சேவை ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மக்கள் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட ரைரு கோபால் இன்று காலமானார்.