Sunday, December 28, 2025

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்து – கேரள முதல்வர் பேட்டி

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் பீகாரைப் போல வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகளுக்கு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியின் மூலம் தேர்தல் ஆணையத்தின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது என்றும், இது தேர்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க வழிவகுக்கும் எனவும் கூறினார்.

Related News

Latest News