மலர்களை தூங்க வைக்கும் ரகசியம்

237
Advertisement

உலகிலேயே மலர் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா மற்றும் எக்குவடார் நாடுகளுக்கு இணையாக போட்டி போடும் கிழக்கு ஆப்ரிக்க நாடு, கென்யா.

கென்யாவில் இருந்து ஏற்றுமதியாகும் மலர்கள், கடல் வழியாக 30 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஐரோப்பிய நாடுகளை சென்றடைகிறது.

அங்கு மலர்களை வாங்குவோருக்கு, 1 வாரம் வரை வைத்து பயன்படுத்த பரிந்துரை வழங்கப்படுகிறது.

இத்தனை நாட்கள் பூக்கள் தாக்குப்பிடிக்க, கென்யா வியாபாரிகளின் அறிவியல் பூர்வமான அணுகுமுறை தான் காரணம்.

கப்பலில் கொண்டு செல்லப்படும் மலர்கள் 30 நாட்களும், 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருப்பதை உறுதி செய்து 4% ஆக்ஸிஜன் மற்றும் 4% கார்பன் டையாக்ஸைடு வாயுவை ஒரே சீராக பராமரிக்கும் போது, பூவின் அனைத்து செயல்பாடுகளும் உறைய வைக்கப்பட்டு, மலர்கள் உறங்கும் நிலைக்கு செல்வதாக கூறப்படுகிறது.

மேலும், பூஞ்சை நோய் தாக்காமல் இருக்க, ரோஜா மலர்களின் மீது சில ரசாயனங்களும் தெளிக்க படுவதனாலேயே, ஒரு மாதத்திற்கும் மேல் வரை பாதுகாக்க முடிவதாக மலர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நிலம் மற்றும் காற்று வழியை விட கடல் மார்க்கமான போக்குவரத்தின் விலை குறைவு என்பதாலும், ஏற்றுமதி சார்ந்த சவால்களை கென்ய மலர் வியாபாரிகள் சிறப்பாக சமாளிப்பதாலும், நாளடைவில் கென்யாவின் மலர் வர்த்தகம் மூலம் அந்நாட்டிற்கு,  ஒரு வருடத்திற்கு 934 மில்லியன் வரை வருவாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.