Wednesday, February 5, 2025

முதல்வர் அதிஷி விரைவில் கைது செய்யப்படுவர் – கெஜ்ரிவால் கணிப்பு

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல்வர் அதிஷி பொய் வழக்கில் கைது செய்யப்படுவர் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுர்களான அதிஷி, சவுரவ் பரத்வாஜ், சத்யேந்தர் ஜெயின் ஆகியோர், பொய் வழக்கில் கைது செய்யப்படுவார்கள். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் இறுதியில் நீதி வெல்லும்.

போக்குவரத்துத் துறையில் அதிஷி மீது அவர்கள் ஒரு போலி வழக்கைத் தயாரிக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம். அதிஷியை கைது செய்ய அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என சமீபத்தில் சி.பி.ஐ, அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்”. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Latest news