கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதையடுத்து கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.