18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த வெற்றியை கொண்டாட கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் இன்று பெருங்களூரு வந்தடைந்தனர். அப்போது கையில் ஆர்சிபி கொடியை பிடித்தப்படி கர்நாடக துணை முதல்வர் வருகை தந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.