Wednesday, July 2, 2025

பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி காலமானார்

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். முன்னதாக ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஷிஹான் ஹூசைனி அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து சிகிச்சைக்காக ரூ.5. லட்சம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை (மார்ச் 25) 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news