கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ’காந்தாரா’ திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது.
இதையடுத்து கடந்த அக்டோபர் 2-ந் தேதி வெளியான ’காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் சுமார் 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உலக அளவில் ரூ.818 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
இந்நிலையில், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வரும் 31ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
