Thursday, February 19, 2026

‘காந்தாரா 2’ படத்தின் ரிலீஸ் தேதி : உறுதி செய்த படக்குழு

கன்னடத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து, 2022ஆம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. இப்படம் உலகளவில் 400 கோடிக்கு மேல் வசூலித்து, கன்னட திரையுலகில் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக பாராட்டு பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ‘காந்தாரா’ திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

Related News

Latest News