பிரபல கன்னட நடிகர் சந்தோஷ் பாலராஜ் 34 வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென உயிரிழந்திருப்பது கன்னட திரையுலகினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல தயாரிப்பாளர் அனேகல் பாலராஜின் மகனான இவர், 2009ஆம் ஆண்டு கெம்பா என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். சில வாரங்களுக்கு முன்பாக பெங்களூர் அப்போலோ மருத்துவமனையில் சந்தோஷ் பாலராஜ் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் சந்தோஷ் பாலராஜ் உயிரிழந்ததாகத் தெரிய வந்துள்ளது. இதனால் கன்னட திரையுலமே அதிர்ச்சி அடைந்துள்ளது.