சைக்கிளில் சென்றவரை எட்டி உதைத்த கங்காரு

45
Advertisement

வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் நண்பர்கள்
இருவர் சைக்கிளிங் சென்றுகொண்டிருக்கின்றனர். திடீரென்று சாலையைக்
கடக்கத் துள்ளிக்குதித்த கங்காரு சைக்கிளிங் சென்றுகொண்டிருந்த
நபர்மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் அப்படியே படுத்துக்கிடக்கிறார்.

கங்காருவோ வந்த வேகத்தில் துள்ளிச்சென்று மறைந்துவிடுகிறது.
தவறு யார் மீது? சாலையில் சைக்கிளிங் வந்தவர் மீதா…சாலையைக்
கடக்க முயன்ற கங்காரு மீதா… சாலமன் பாப்பையாவை வைத்துப்
பட்டிமன்றம் நடத்தலாமா…?

வேண்டாம்…..

Advertisement

நல்ல வேளை… ஹெல்மெட் போட்டிருந்ததால மண்ட தப்பிச்சது.
இல்லேன்னா என்னாயிருக்கும்…

இனிமே, சாலையைக் கடக்கும்முன் சாரி, சாலையில் செல்லும்போது
சைடுவாக்குல குரங்கோ கங்காரோ, யானையோ மானோ, சிங்கமோ
புலியோ கடக்குதான்னு நின்னு பாத்துட்டு சைக்கிளிங் போங்க மஹாஜனங்களே…

தப்பு எம்மேல இல்லன்னு உங்களுக்கே தெரியும்….இருந்தாலும்
கங்காருவ விசாரணைக்கு அழைக்க முடியுமா….
அப்படியே வந்தாலும் சாலமன் பாப்பையா பேசுறதக் கேட்டு
அது விழுந்து விழுந்து சிரிச்சா…..
எத்தன பேர் மண்டய பதம் பார்க்குமோ……