Wednesday, July 30, 2025

கள்ளக்காதலில் காஞ்சிபுரம் முதலிடம்!!உண்மையா? பொய்யா?

தற்போதைய காலகட்டத்தில் திருமணம் தாண்டிய உறவால் கொலை, குடும்பத்தில் வன்முறைகள் என அன்றாடம் நாம் பார்த்துவருகிறோம்.. இந்த நிலையில் திருமணம் தாண்டிய உறவுகள் அதிகரித்து வருவதாக சில ஆய்வு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது yougov மற்றும் Ashley Madison..

இது முற்றிலும் yougov மற்றும் Ashley Madison பயன்பாடு ரீதியான சர்வே அறிக்கையாகும்..

இப்போ எல்லாவற்ரைக்கும் நாம் app-களை பயன்படுத்துகிறோம்.. அந்த வகையில் friendship-க்கு app, Love-க்கு app, தன்பாலினம் ஈர்ப்பாளர்களுக்கு app இது போன்றவையில் ஓன்றுதான் திருமணம் தாண்டிய உறவுக்கு Ashley Madison app இருக்கு.

இந்த Ashley Madison app அறிமுகப்படுத்தப்பட்ட அப்போவே ஒரு சர்சை பெருமளவுக்கு வெடித்தது.. அதாவது ஆரம்கட்டத்தில் இவங்களோட கேட்ச் பிரைஸ் என்ன தெரியுமா? Life is short. Have an affair அதாவது,வாழ்க்கை மிக சிறியது அதனால் இன்றை கள்ள தொடர்பு கொள்ளுங்கள் அப்படின்ற மாதிரியான கேட்ச் பிரைஸ் ஒரு கேட்ச் பிரைஸ் வச்சிருந்தாங்க, சர்ச்சைக்கு பிறகு இதனை மாற்றி find your moments வைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த பிரபல Ashley Madison app ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆய்வு முடிவுகளை வெளிவிடுவதுண்டு.அதாவது இந்த செயலி பயன்பாடு உள்ள நாடுகளில் திருமணம் தாண்டிய உறவுகள் மற்றும் எண்ணிக்கை சதவீதம் என அனைத்தையும் வெளியிடப்படும் .. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஆய்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளன.

இதற்கு நம் நாடும் விதிவிலக்கல்ல.அதாவது இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கியமான பகுதிகளும் இடம்பெறுள்ளது.. மேலும் இந்தியா 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த செயலியை இந்திய மற்றும் பிரேசில் இந்த இருந்து நாடுகளும் தான் அதிக அளவு பதிவிரக்கம் செய்து வருது என்றும் தகவல் வெளியாக்கிருக்கிறது. சதவீதத்தில் இந்தியா 53% உள்ளதாகவும் கூறப்படுகிறது. புள்ளிப் பட்டியலில் பார்த்தல் 6வது இடத்தில் வடமேற்கு டெல்லி,5வது இடத்தில் மேற்கு டெல்லி, 4வது இடத்தில் தெற்கு டெல்லி, 2வது இடத்தில் தென்மேற்கு டெல்லி, 3வது இடத்தில் கிழக்கு,டெல்லி உள்ளிட்டவை உள்ளன.

இதுதவிர டெல்லி அருகே உள்ள கொரேகான், காசியாபாத், நொய்டாவின் கவுதம் புத்தா நகர் ஆகிய பகுதிகளிலும் இந்த செயலியை அதிகமானவர்கள் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேட்டாவின் மூலம் முதல்தர நகரங்களை விட இரண்டாம் தர, 3ம் தர நகரங்களிலும் இந்த செயலி, முதல் தர நகரங்களை விட வேகமாக வளர்ச்சி காண்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக இந்த பட்டியலில் டாப் 20 நகரங்களில் மும்பை இடம்பெறவில்லை. மாறாக ஜெய்ப்பூர், சண்டிகர், ராய்கர் போன்ற 2ம் கட்ட இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பட்டியலில் முதல் இருப்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் இருந்து தான் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் திருமணத்தை மீறிய கள்ளஉறவில் இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டில் காஞ்சிபுரம் 17 வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடம் பிடித்துள்ளது.
நம் நாட்டில் டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் உள்பட பல முக்கிய நகரங்களில் டேட்டிங் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த நகரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதலிடம் பிடித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News