தி.மு.க. சார்பில் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம், அ.தி.மு.க. சார்பில் தனபால், இன்பதுரை, மக்கள் நீதி மயயம் சார்பில் ஆகியோர் இன்று மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றனர்.
மாநிலங்களவை எம்பியாக பதவியேற்க கமல்ஹாசன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். கமல்ஹாசன் இன்று எம்.பி.யாக பதவியேற்கும் நிகழ்வை தொண்டர்களும், பொதுமக்களும் பெரிய திரையில் நேரலையில் காண்பதற்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.