ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2023 ம் ஆண்டு வெளியான திரைப்படம் பார்க்கிங். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இந்நிலையில் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த துணை நடிகர் விருது (எம்.எஸ்.பாஸ்கர்) மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருது (ராம்குமார் பாலகிருஷ்ணன்) என 3 விருதுகளை வென்றுள்ளது.
இதையடுத்து 3 தேசிய விருதுகளை வென்ற ‘பார்க்கிங்’ படக்குழுவினரை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஹரிஸ் கல்யான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.