பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
மேலும், இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
குறிப்பாக இந்த திரைப்படம் சாண்டியின் வில்லத்தனத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து படக்குழு இந்த திரைப்படத்தை இந்தி மொழியில் கடந்த 5 ஆம் தேதி வெளியிட்டனர். இந்த நிலையில், லோகா திரைப்படம் உலகளவில் 202 கோடி ரூபாய் வசூலித்துள்ளது .வேகமாக ரூ.200 கோடி வசூல் செய்த 2 ஆவது மலையாள சினிமா என்ற சாதனையை லோகா திரைப்படம் படைத்துள்ளது.
இந்த சூழலில் IMDB-வலைத்தளத்தில் இந்த வார பிரபலமான இந்திய திரைப்பிரபலங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இரண்டாம் இடத்தில் ஷாருக்கான் இருக்கிறார்.
மேலும், சியக்கர்த்திகேயன் 35 இடத்தை பிடித்துள்ளார், இதனைத்தொடர்ந்து மோகன்லால் 33 வது இடம்,பவன் கல்யாண் 42 வது இடம், மம்மூட்டி 47 வது இடத்தை பிடித்துள்ளனர்.