பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவரது அக்கம்பக்கத்தினர், அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் முதலில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கல்பனா தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.