பிஆர்எஸ் கட்சியில் இருந்து மகள் கவிதாவை தற்காலிகமாக நீக்கி தெலுங்கானா முன்னாள் முதல்வரும், அந்த கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தலைவர்கள் மீது தொடர்ந்து கவிதா குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில் தான் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி மகள் கவிதா மீது தந்தை சந்திரசேகரராவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.