பிரபல நடிகை ஜோதிகா. இவர், இந்தியில் ஒரு திரைப்படத்தில் நடித்து அறிமுகமான போழுது பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து கேமியோ ரோல் மூலம் வாலி திரைப்படத்தால் வரவேற்பை பெற்றார். இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது.தமிழ் சினிமாவின் டாப் ஹிட் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அசத்தினார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவுடன் நடித்து சமயத்தில் இருவரும் காதலிக்க தொடங்கினார். பல வருட காதலுக்கு பிறகு 2011ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.திருமணத்துக்கு முன்பு வரை ஜோதிகாவுக்கு சந்திரமுகி என பல நல்ல திரைப்படங்கள் கிடைத்தது.இவர் திருமணம் முடிந்து சில வருடங்கள் அமைதியாக இருந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு 36 வயதினிலே படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து நிறைய கதையின் நாயகி படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பழைய இருந்த இடம் கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் சினிமாவிற்கு தாவினார்.
அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி திரைப்படம் ‘சைத்தான்’. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.இந்த திரைப்படத்தை விகாஸ் இயக்கினார்.
இந்த நிலையில் திரைப்பட வெளியீட்டின் போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது “அண்மையில் நான் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தேன். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு ஒற்றுமையை பார்க்கிறேன். படப்பிடிப்பில் இருவரும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து போனார்கள். தமிழில் நான் கிட்டதட்ட எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தில் போஸ்டரில் கூட என் முகம் வராது. ஆனால் அஜய் , மம்மூட்டி போன்ற நடிகர்கள் சினிமாவிற்கு திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள். நிறைய பேர் சினிமாவில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ஆனா ஒரு சிலர் தான் திருப்பி தர நினைக்கிறார்கள் ” என ஜோதிகா பேசியுள்ளார்.
இந்த செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் நெட்டிசன்கள் ஜோதிகா கூறுவது தவறு, தமிழ் சினிமாவில் என்றும் பட நாயகிகளை போஸ்டர்களில் போடுவார்கள், என தமிழில் ஜோதிகா நடித்த திரைப்படங்ளின் போஸ்டரி பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.