Friday, March 28, 2025

நீதித்துறை பணியிலிருந்து நீதிபதி யஷ்வந்த் வர்மா நீக்கம்

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஸ்வந்த் வர்மா வீட்டில், கத்தை கத்தையான ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, மூன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்நிலையில், இன்று டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீதித்துறை பணிகளில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டார். சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நீதித்துறைப் பணிகள் மறு உத்தரவு வரை திரும்ப பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Latest news