இனி போக்குவரத்துத் துறையின் சேவைகளுக்கு நீங்கள் அலுவலகங்களுக்கு ஓட வேண்டிய அவசியமே இல்லை! உங்கள் கைபேசியில் வாட்ஸ்அப்பில் “Hi” என்று ஒரு மெசேஜ் அனுப்பினாலே போதும்… அனைத்து தகவல்களும் உடனே உங்கள் மொபைல் திரையில்!
இந்தி மற்றும் ஆங்கிலம் – இரண்டு மொழிகளில் செயல்படும் இந்த புதிய சேவையை உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு இது ஒரு புதிய படியாக அமைந்துள்ளது. சாமானிய மக்கள் முதல் பெரியோர் வரை, யாரும் நெடுநேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம், செலான் விவரங்கள், உரிமம் புதுப்பித்தல், உரிமை மாற்றம், சாலை வரி – இவையெல்லாம் ஒரே இடத்தில், ஒரே மெசேஜில் கிடைக்கிறது.
இந்த வசதியை பயன்படுத்த, உங்கள் மொபைலில் 8005441222 என்ற எண்ணை சேமிக்கவும். அதன்பின் வாட்ஸ்அப்பில் “Hi” என்று அனுப்பினாலே போதும். உடனடியாக ஒரு சாட்பாட் செயல்பட்டுத் தேவையான சேவைகளை நேரடியாக வழங்கும்..
இந்த சேவை 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் இயங்கும். எப்போதும், எங்கிருந்தும் – தகவல்கள் நேரடியாக வரும்..முக்க்கியமாக இந்த சேவை முற்றிலும் இலவசம்!