Wednesday, October 8, 2025

ஜஸ்ட் ஒரு டிகிரி போதும்! ரயில்வேயில் வேலை! விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

இந்திய ரயில்வேயில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 368 காலியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படவிருக்கின்றன. குறிப்பாக, செக்ஷன் கண்ட்ரோலர் பணிக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என்பது தகுதி நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 14 அக்டோபர் 2025 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் தளர்வு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வரை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வரை கூடுதல் வயது தளர்வு வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், 10 முதல் 15 ஆண்டுகள் வரை அதிகபட்ச தளர்வு பெறலாம்.

தேர்வு முறையாக, முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு அதாவது CBT நடத்தப்படும். இதில் தகுதி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக ஆவணச் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பின்னர் மருத்துவ பரிசோதனை நடைபெறும். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுபவர்களே இறுதியில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 14 அக்டோபர் 2025 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்க திரையில் கொடுக்கப்பட்டுள்ள (https://www.rrbchennai.gov.in/ என்ற) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

இந்த அறிவிப்பினால், அரசு பணிக்கு முயற்சி செய்யும் பட்டதாரிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News