“கட்டப்பஞ்சாயத்து செய்யவா நீங்கள் எம்.எல்.ஏ ஆனீர்கள்?” – ஜெகன் மூர்த்தியிடம் நீதிபதி காட்டமான கேள்வி

திருவள்ளூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினரும், புரட்சி பாரதம் கட்சி தலைவருமான ஜெகன் மூர்த்தியை காதல் விவகாரத்தில் ஆள் கடத்தல் புகாரில் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதையடுத்து பூவை ஜெகன் மூர்த்திக்கு ஆதரவாக நீதிமன்ற அறையில் கூடிய நிலையில், இதுவொன்றும் படப்பிடிப்பு தளமல்ல எனவும், வழக்கை தனியாக எதிர்கொள்ளாமல் கூட்டம் கூட்டினால் கைது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.

பூவை ஜெகன்மூர்த்தியிடம், நீங்க எந்த தொகுதி எம்.எல்.ஏ? எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீர்கள்? கட்டப்பஞ்சாயத்து செய்யவா நீங்கள் எம்.எல்,ஏ-வாக பொறுப்பேற்றீர்கள் என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

Related News

Latest News