Saturday, May 24, 2025

இவ்ளோ குறைஞ்ச விலையில் ரீசார்ஜ் பிளான்கள் எங்கேயுமே கிடைக்காது! ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கொத்தாக 3 ஆஃபர்!

அதிக வாடிக்கையாளர்களை யார் தன் பக்கம் ஈர்க்கிறார்கள் என்பதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குள் பெரிய அமளி துமளியே நடக்கிறது. அதனால் குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அள்ளி வாரி இறைத்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூபாய் 200க்குள் 3 சூப்பரான பிளான்களை களமிறக்கி சக்கை போடு போட்டு கஸ்டமர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி உள்ள ஜியோ ரூபாய் 189 பிளானை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 GB டேட்டா கிடைப்பதோடு இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 kbps வேகத்தில் இணையத்தை பயன்படுத்தலாம்.

இந்த Plan-னில் ஒரு நாளைக்கு 300 SMS-களை அனுப்பிக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் அன்லிமிடெட் லோக்கல், STD மற்றும் ரோமிங் கால்களும் இலவசம். இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சந்தாவை பெற முடியும் என்பது அநேக வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்கிறது.

அடுத்து 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூபாய் 198 பிளானில் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்களுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவும் கிடைக்கிறது. இந்த டேட்டாவை 4G வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தலாம் என்பதோடு இதற்கு பிறகும் 64 kbps வேகத்தில் டேட்டா கிடைக்கிறது. மட்டுமல்லாமல் SMS-கள் நாளொன்றுக்கு 100 அனுப்பலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஜியோ ஆப்களின் சலுகை இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5G டேட்டாவை லிமிட் இல்லாமல் பெற்று கொள்ளலாம்.

இதை போலவே ரூ.199 விலையிலும் ஒரு ரீசார்ஜ் திட்டமும் ஜியோவிடம் உள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் என்பதோடு தினமும் 1.5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். தினமும் 100 SMS Free-யாக அனுப்பிக் கொள்ள முடியும். மேலும் அன்லிமிடெட் கால் வசதியுடன் இந்த திட்டத்திலும் JioTV, Jio Cinema மற்றும் JioCloud-க்கான சந்தாவை பெற்றுக் கொள்ள முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news