Reliance Jio நிறுவனம் ரூ. 365 மதிப்பில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் கிடைக்கிறது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்க்கும்போது, 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படுகிறது. இதில் மொத்தமாக 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அந்த டேட்டா முழுவதும் பயன்படுத்தப்பட்ட பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும்.
அதேபோல், இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, ரூ. 7.47 டாக்-டைம் தொகையும் இதில் அடங்கியுள்ளது.
மேலும், கூடுதல் பலன்களாக 3 மாதங்களுக்கு JioHotstar (மொபைல்/டிவி), 50 ஜிபி வரை ஜியோ AI கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் JioTV சந்தா வழங்கப்படுகிறது.
இதோடு, 18 மாதங்களுக்கு Google Gemini Pro சந்தாவும் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 35,100 என கூறப்படுகிறது. இந்த சந்தாவில் 200 ஜிபி வரை கிளவுட் ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் கிடைக்கும்.
ஆனால், இந்த கூடுதல் பலன்களை பயன்படுத்த பயனர்கள் ரூ. 349 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் திட்டம் ஒன்றை ஏற்கனவே செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த ரூ. 365 திட்டத்தில் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வசதி வழங்கப்படவில்லை.
