Jio மற்றும் Airtel அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் பட்ஜெட் பிரின்ட்லி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வரும் நன்மையை பார்க்கலாம்.
ஏர்டெலின் புதிய ரூ,195 திட்டம்
ஏர்டெல் சமீபத்தில் ரூ.195 விலையில் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் 90 நாள் வேலிடிட்டியாகும். இது 15 ஜிபி 4 ஜி டேட்டாவை வழங்குகிறது. மேலும் ரூ.149 மதிப்புள்ள 90 நாள் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது.
ஏர்டெலின் புதிய ரூ,199 திட்டம்
இந்த திட்டம் அன்லிமிடெட் கால்கள், இலவச தேசிய ரோமிங் மற்றும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் 300 இலவச எஸ்எம்எஸ்களும் அடங்கும். கூடுதலாக, ஏர்டெல் பயனர்கள் ரூ.17,500 மதிப்புள்ள பெர்ப்ளெக்சிட்டி AI சந்தாவைப் வழங்குகிறது.
ஜியோவின் ரூ,189 திட்டம்
இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28-நாட்கள் ஆகும். இதில் அன்லிமிடெட் காலிங்,மற்றும் இலவச நேஷனல் ரோமிங் ஆகியவை வழங்கப்படுகிறது. 2GB யின் ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் 300 இலவச SMS வழங்கப்படுகிறது.