சென்னைய பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த ஜார்கண்ட் வாலிபர் கைது

சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக வந்து பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை கைது செய்து விசாரித்த போது, பிடிபட்ட நபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் கிஷ்கு (36), என்பதும் அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், எங்கிருந்து அதை வாங்கி வந்தார் என விசாரித்து வருகின்றனர்.

Related News

Latest News