ஜார்க்கண்ட் மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்த ராம்தாஸ் சோரன் காலமானார்.
ராம்தாஸ் சோரன், சமீபத்தில் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராம்தாஸ் சோரன் நேற்று நள்ளிரவில் காலமானார். இந்த தகவலை ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தினார். ராம்தாஸ் சோரனின் மகன் சோமேஷ் சோரனும் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.