உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று மதியம் உணவு டெலிவரி ஊழியர்கள் போல மாறுவேடத்தில் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர்.
ஸ்விக்கி மற்றும் பிளிங்கிட் டெலிவரி ஊழியர்கள் போல உடையணிந்த இரண்டு பேரும் அங்கிருந்த நகைகளை எடுத்து சென்றுள்ளனர்.
கடையில் இருந்து சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.