காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா நேற்று முன்தினம் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்ட போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சுதாவை தாக்கி அவர் அணிந்திருந்த 4.5 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்தார். இந்நிலையில் மயிலாடுதுறை எம்.பி. சுதாவிடம் நகையை பறித்துச் சென்ற குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடி சென்ற 4 சவரன் தங்க நகையையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.