தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14.220-க்கும், ஒரு சவரன் ரூ.1.13.760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14. 320-க்கும். ஒரு சவரன் ரூ.1.14.560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2.75.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
