மத்தியபிரதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் வயலில் விழுந்து விபத்துக்குள்ளாது. அதிலிருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
மத்தியபிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டத்தில், இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 என்ற விமானம் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென விமானம் வயலில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. ஆனால், விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள விமானப்படை, விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது.
விமான விபத்து குறித்த விரிவான காரணங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்திய விமானப்படையின் விமானம் வயல்வெளியில் விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம், அந்த பகுதியில் உள்ள கிராம மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.