அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்கு எதிராக களமிறங்கிய ஜப்பான் !

291
Advertisement

உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்த போரால் உலகளவில் பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக , கச்சா எண்ணெய் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து , வரும் நாட்களில் எலக்ட்ரிக் கார்கள் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை , எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, ஜெர்மனி நாட்டின் வோக்ஸ்வாகன் சிறந்து விளங்குகிறது .

இதற்கு போட்டியாக , கார்களுக்குப் பெயர் போன ஜப்பான் நிறுவனம் , எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யவுள்ளது. டெஸ்லா மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்களுக்கு இணையாக ஜப்பான் நாட்டின் சோனி மற்றும் ஹோண்டா புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.

இந்தக் கூட்டணி , அதிநவீன மொபிலிட்டி சேவைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஜப்பான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நீண்ட காலமாக ஹைட்ரஜென் செல் கார்களைத் தயாரிக்க முயற்சி செய்து வந்த நிலையில் இந்த முயற்சிகள் நினைத்த அளவிற்கு மாபெரும் வெற்றியை அளிக்கவில்லை.

இதனால் சர்வதேச நிறுவனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது.

கார் உற்பத்தியை மொத்தமாக ஹோண்டா நிறுவனமும் மட்டுமே கவனிக்க உள்ளது, சோனி இப்புதிய எலக்ட்ரிக் காரின் டெக் சேவைகளை மட்டும் கவனிக்க உள்ளது என இரு நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்து உள்ளது .