Thursday, April 3, 2025

மிகப்பெரிய நிலநடுக்கம் : 3 லட்சம் மக்களின் உயிருக்கு ஆபத்து

ஜப்பானில் பசிபிக் கடற்கரையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்களின் உயிரிக்கு ஆபத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் ” ஜப்பானில் பசிபிக் கடற்கரையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்களின் உயிரிக்கு ஆபத்து இருக்கிறது. மேலும் ஜப்பான் பொருளாதாரத்தில் 1.81 ட்ரில்லியன் டாலர் பாதிக்கப்படும். இந்த நிலநடுக்கம் உடனடியாக ஏற்படாது. அதற்கான சாத்தியக்கூறு இல்லை. ஆனால் 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான பேரழிவை ஏற்படுத்திய நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

Latest news