தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது Post production பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இந்த படம் குறித்து பேசும்போது கூட, “பக்கா மாஸ் படம், விஜய் சார் ரசிகர்களுக்கு Full மீல்ஸ்” என கூறியிருந்தார். இது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.
இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அனிருத் இசையில், தளபதி விஜய்யின் குரலில் பாடல் ஒன்று தயாராகியுள்ளதாம். இந்த பாடல் வருகிற தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
பொதுவாகவே தளபதி விஜய்யின் திரைப்படத்தில் இருந்து வெளிவரும் முதல் பாடலுக்கு வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அதுவும் இது கடைசி படத்தின் முதல் பாடல் என்றால் சொல்லவே தேவையில்லை.
