Wednesday, April 2, 2025

கோடிக்கணக்கில் விலைபோன ‘ஜனநாயகன்’ படத்தின் OTT உரிமம்

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜன நாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை 121 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest news