ஜன்தன் திட்டத்தின் கீழ் இதுவரை 56 கோடியே 16 லட்சம் பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ள நிலையில், அதில் 23 சதவிகித கணக்குகள், எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், KYC Update செய்யாத வாடிக்கையாளர்களின் ஜன்தன் வங்கி கணக்குகள், வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு செயல்படாது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில் தற்போது பரவும் தகவலில் உண்மை இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. செயல்படாத ஜன் தன் கணக்குகளை மூட எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் KYC தகவல் சேர்க்கப்படவில்லை என்றாலும் வங்கி கணக்கு செயல்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.