Wednesday, April 2, 2025

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து ‘ஜெயிலர்’ படத்தின் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Latest news