கடந்த 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நாளை விசாகப்பட்டினம் செல்கிறார். விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோ நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தமிழ்நாடு மாநிலம் கரூரில் நடந்தது போல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக கூறி போலீசார் ரோடு ஷோவுக்கு தடை விதித்துள்ளனர்.